கிழக்கு முதல்வரின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக்கட்டடம் நாளை திறப்பு-பிரதம அதிதி கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
292

ஏ.எல்.எம்.லியாப்தீன்

வாழைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் நிதியொதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக்கட்டடத்திற்கு அவர்களின் கரங்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் நாளை 13.07.2017ம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு மிகவும் விமர்சையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் கௌரவ இந்திரகுமார் நித்தியானந்தன், சுகாதார அமைச்சின் செயலாளர் K.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் K.முருகானந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள், பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
வாழைச்சேனை-கோறப்பற்று மத்தி செயற்குழு.001 (1) 001 (2) 001 (3) index

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here