வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் திறந்து வைப்பு-பிரதம அதிதி கிழக்கு முதல்வர்

0
299

FB_IMG_1500003380153எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் (முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)

கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் கரங்களினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அடிக்கல் வைக்கப்பட்டு 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் என்பன நேற்று 13.07.2017ம் திகதி வியாழக்கிழமை அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக், கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கருணாகரன், நடராஜா, வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மதன் ஆகியோருடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் சியாஹுல் ஹக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வைத்தியசாலைக்குத் தேவையான பொருட்களும், வைத்தியசாலைக் கட்டடத்திற்கான லிப்ட் (மின் தூக்கி) யும் கையளிக்கப்பட்டது.20170713_125328 FB_IMG_1500003368163 FB_IMG_1500003371790 FB_IMG_1500003380153 FB_IMG_1500003384393 FB_IMG_1500003396190 IMG-20170714-WA0028

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here