கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக தலைமைக்காரியலாயம் திறந்து வைப்பு: அதிதி கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
191

சு 3முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
கிழக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் தலைமைக்காரியலாயம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம்.நசீர், கே.துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத்தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், மா.நடராஜா, கே.கருணாகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் உப தலைவர் சர்ஜூன் அபூபக்கர் ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தை இலங்கை சுற்றுலாத்துறையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக மாற்றியமைப்பதே கிழக்கு முதலமைச்சரின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களில் காணப்படும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தி, அவற்றை அபிவிருத்தி செய்து, சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது கிழக்கு சுற்றுலாசார் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அலுவலகமாகவும் செயற்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், இததி போன்ற அலுவலகங்கள் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் திறக்கப்படவுள்ளன. சு 3 சு 4 சு சு2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here