ஞானசார தேரரை ஜனாதிபதியே பாதுகாப்பதாக விமர்சித்த ஆசாத் சாலி, ஜனாதிபதியுடன் வெளிநாடு பயணம்

0
244

IMG_9509இந்நாட்டு முஸ்லிம்களில் பல தரப்பட்ட பிரச்சினைகள் அப்படியே இருக்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவரகள் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் அஸாத் சாலி போன்றவர்கள் ஜனாதிபதியுடன் வெளிநாடுப் பயணங்கள் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டுத்தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை அழைத்துச்செல்வது வழக்கம். அந்த வகையில், மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் ஆஸாத் சாலியையும் ஜனாதிபதி தன்னோடு அழைத்துச்சென்றுள்ளார்.

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக கடும் விமர்சனங்களை கடந்த வாரம் முன்வைத்து விட்டு, இந்த வாரம் அதே ஜனாதிபதியுடன் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸாத் சாலி தொடர்பில் சமூகம் நன்கு விளங்கி வைத்திருக்கின்றமை காரணமாக நாம் அவரது அரசியல் நாடகங்கள் தொடர்பில் இந்த இடத்தில் பேசிப்பயனில்லை.

இருந்த போதும், அவரது இந்த பயணம் முஸ்லிம்களுக்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை.

அளுத்கமை கலவரம் தொடர்பில் நீதியோ இழப்பீடோ இதுவரை கிடைக்காமை, வில்பத்து வர்த்தமானி, மாணிக்கமடு சிலை வைப்பு, முஸ்லிம் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், நல்லாட்சி அரசில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு இழப்பீடோ நீதியோ நிலை நாட்டாமை, ஞானசார தேரர் விடயத்தில் அரசின் இரட்டை வேடம் எனப்பல தரப்பட்ட விடயங்களின் சமூகம் கடும் ஏமாற்றங்களைச் சந்தித்துள்ளது.

இந்த மாதிரியான ஒரு இக்கட்டான கால கட்டத்தில் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக முஸ்லிம் ஒருவர் வெளிநாட்டு செல்வது இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் சகல சௌபாக்கியங்களுடன் எந்தவித சிக்கல்களுமமில்லாமல் வாழ்கின்றனர் என்ற செய்திதையே செல்லி நிற்கும்.

அதுதவிர, அரசாங்க செலவில் ஜனாதிபதியின் ஒரு பிரதிநிதியாக ஒருவர் சென்று விட்டு, அங்கு அரசாங்கத்துக்கெதிராகப் பேச முடியாது. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையென்றே சொல்லி விட்டு வர வேண்டும். அதன் காரணமாக, இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிநாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் குறைவடையுமே தவிர, ஏதுவும் நடக்கப்போவதில்லை.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையெனக் காட்ட அஸாத் சாலியை ஜனாதிபதி பங்களாதேஷுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டுமென்றே நாம் இந்தப்பயணத்தைக் கருத வேண்டியுள்ளது.
இது போன்ற விடயங்களில் எமது அரசியல்வாதிகள் இன்னும் அக்கறையுடனும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டும். ஞானசார தேரரை ஜனாதிபதியே பாதுகாப்பதாகக் கூறி விட்டு அவருடன் வெளிநாட்டுப் பயணம் தேவை தானா?IMG_9509

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here