மாகாண அமைச்சுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அதிகார இழுபறி இருந்தது-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
31

ளிசசமுதலமைச்சரின் ஊடகப்பிரிவு

தாம் முதலமைச்சராகப்பதவி வகிக்க முன்னர் தாம் சுற்றுலா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் குறித்த அமைச்சுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அதிகார இழுபறி இருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

முன்னர் இருந்த ஆளுனர் மொஹான் சமரநாயக்க மற்றும் மத்திய அரசின் அமைச்சுக்களிலிருந்த சில அதிகாரிகளும் சுற்றுலா அமைச்சுக்கான அதிகாரங்களை வழங்குவதில் அக்கறை செலுத்தவில்லையெனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் தலைமைக்காரியாலயத்தை மட்டக்களப்பில் திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக்கூறினார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். தற்போது ஜனாதிபதியின் செயலாளராகவுள்ள ஒஸ்ரி்ன் பெர்ணாண்டா அவர்கள் ஆளுநராகப் பதவியேற்றதன் பின்னர் தான் அவருடன் இணைந்து கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

அதனடிப்படையில் நகர்வுகளை முன்னெடுத்து 2016 ஆம் ஆண்டு சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றி இன்று சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக்காரியலாயத்தை ஸ்தாபித்துள்ளோம்.

இதன் மூலம் சர்வதேச ரீதியிலுள்ள சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதத்திலான திட்டங்களை முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றுலா அபிவிருத்திமிக்க மாகாணமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனவே, மாகாணத்துக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகி்ன்றோம்.

இன்று ஜனாதிபதியும் பிரதமரும் எமது பல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னெடுக்க ஆதரவு வழங்குவது குறித்து நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு மென்மேலும் கிழக்கிற்கான நிதிகளை வழங்கி எம்மக்களின் வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்தும் எமக்கு உதவிகளை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here