சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கமையவே நல்லாட்சி நடைபெறுகிறது-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0
38

unnamed (8)இலங்கையில் பல வருடங்கள் முன்பு திட்டமிடப்பட்ட சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேறுவதை இலங்கையில் நடைபெறும் பல விடயங்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதி மன்றத்தில் அவருக்கெதிரான வழக்கு விசாரணை முடிவடைந்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத்தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெறும் சில விடயங்களை அவதானிக்கும் போது, அவைகளில் சர்வதேச நிகழ்ச்சி நிரல்கள் துல்லியாகத் தென்படுகிறது. இலங்கை பாதுகாப்புப்பிரிவின் முக்கிய நபர்கள்  சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த பாதுகாப்புப் பிரிவைச்சேர்ந்தவர் தமிழ் மக்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று காணாமல் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார். இது சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களின் ஆரம்பப்படியென்பதை இலங்கை சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதனைத்தொடர விட்டால், இலங்கையில் தமிழ் மக்களைத்தவிர ஏனைய மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு சென்று விடலாம். இலங்கை  நாட்டில் கொடிய யுத்தத்தை ஒழிக்க உயிரைத்துச்சமாய் மதித்த இன்னும் பல முக்கிய நபர்கள் கைது செய்யப்படலாம்.

இதில் இலங்கையின் புலனாய்வுப்பிரிவுக்கு பலம் சேர்க்கின்ற பல முக்கிய புலனாய்வாளர்களும் உள்ளடங்குவதாக அறிய முடிகிறது. அது மாத்திரமன்றி, தமிழ் மக்கள் தங்களது முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்றாகத் தூக்கிப்பிடித்துள்ள வடக்கு, கிழக்கை இணைத்து இதர சிறுபான்மை மீது அடிமைச்சாசனம் எழுதப்பட்டு விடலாம்.

கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு நபர்கள் மீது இவ்வரசின் திட்டமிட்ட பழிவாங்கல் செயற்பாடுகள் பல இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாருமே சிறுதும் அஞ்சப்போவதில்லை. எம்மோடு பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. எங்களோடு குறித்த எண்ணிக்கையிலும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையத் யாராகவுள்ளனர். மிக விரைவில் இவ்வாட்சி கவிழுமென்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

தற்போது சு.க மற்றும் ஐ.தே.க களுக்கிடையில் ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ளது. எங்களுடைய சு.காவைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாதென்ற உறுதியான முடிவிலுள்ளனர். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்பீடத்திலும் குழப்பம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

இவைகள் இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளன. நாங்கள் மிகப்பலமான திட்டங்களோடு இவ்வாட்சியைக் கவிழ்க்கும் எண்ணத்திலிருந்தோம். அந்தத்திட்டங்களைத் தீட்டிய நேரங்களை மனைவி, மக்களோடு செலவு செய்திருக்கலாம். அந்தளவு இன்றைய ஆட்சி கவிழ்ப்பு எங்களுக்கு சாதகாமாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here