நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விசேட மக்கள் சந்திப்பு

0
231

20139852_1373824202652738_9002498605742100943_n(NFGG ஊடகப் பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG ) விசேட மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் கடந்த 14.07.2017ம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு தேசிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்பட்ட முதலாவது இம்மக்கள் சந்திப்பு நிகழ்வானது, காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள NFGG யின் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

NFGG யின் மகளிர் பிரிவினால் பெண்களுக்கென ஏற்பாடு செய்யபட்பட்ட பிரத்தியேக நிகழ்வு பிற்பகல் 04.30 மணிக்கும் ஆண்களுக்கான நிகழ்வு இரவு 08.00 மணிக்கும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித்தவிசாளர் சிறாஜ் மசூர் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழ்லுல் ஹக் மற்றும் MACM.ஜவாஹிர் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.

கடந்த 11 வருடங்களில் கடந்து வந்த பாதையின் அனுபவங்களை இலக்கியத்தோடு மீட்டிப்பார்க்கும் விசேட கவிதையொன்றினை NFGGயின் இஸ்தாபக உறுப்பினர் வித்தியாகீர்த்தி அமீர் அலி ஆசிரியர் வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களும் தமது கருத்துக்களை வழங்கினர்.

ஆண்களும் பெண்களும் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, இரவு 11.00 மணியளவில் இராப்போசனத்துடன் நிறைவு பெற்றது.19642517_1373823989319426_3444457443090865865_n 20106328_1373823969319428_5373864036115810124_n 20108212_1373824105986081_175315769402319032_n 20139852_1373824202652738_9002498605742100943_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here