வித்தியா படுகொலை வழக்கில் கைதான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல்: அவரது வாகனமும் விபத்து

0
312

20138080_1603276059703012_702002398_oபாறுக் ஷிஹான்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் லலித் ஏ  ஜெயசிங்க யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் இன்று (16)  காலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 25 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச்சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிதரன் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் லலித் ஏ ஜயசிங்க மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது கொழும்பில் வைத்து   கைது செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன் போது, யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் இன்று (16) காலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 25 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நேற்றிரவு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போது, சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் லலித் ஏ ஜெயசிங்கவை அழைத்து சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அதிலிருந்த இருவர்  சிறு காயமடைந்ததாகத் தெரிய வருகின்றது.

தற்போது அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.20133563_1603276039703014_2057632304_o 20133563_1603276056369679_364932400_o 20137940_1603276053036346_941040530_o 20138080_1603276059703012_702002398_o 20148654_1603276063036345_506539824_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here