காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை, ஆற்றங்கரையோர மரநடுகை அமைக்க நிதியொதுக்கீடு

0
227

Alien_Ink_2560X1600_Abstract_Background_1(ஆதிப் அஹமட்)
நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி.எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் நடைபாதை (Joking path) அமைப்பதற்கு ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

காத்தான்குடி ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கப்படவுள்ள இவ்வுடற்பயிற்சி நடைபாதை நடைப்பயிற்சிக்கென ஆற்றங்கரைக்கு வரும் பெண்களுக்கென அமைக்கப்படவுள்ளது. ஆற்றங்கரை வீதிக்கு (Lagoon Drive) அதிகமான ஆண்களும் பெண்களும் நடைப்பயிற்சிக்கு வருவதால் பெண்கள் பிரத்தியேகமாக நடப்பதற்கென இப்பாதை அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், இந்நடை பாதையின் ஓரமாக நிழல் தரும் மதுரை மரங்களும் நடப்படவுள்ளன. அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்காவிற்கு அண்மையிலிருந்து குபா ஜும்ஆப் பள்ளிவாயல் அருகாமை வரை இந்நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

மேற்படி வேலைத்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலகமூடாக செயற்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதை மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், மிக நீளம் கூடிய நடைபாதையாக இது அமைக்கப்பட நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுக்கு திட்ட முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரினால் பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழக மைதான அபிவிருத்திக்கென ரூபாய் பத்து இலட்சமும், மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டுக்கழக மைதான அபிவிருத்திக்கென ரூபாய் பத்து இலட்சமும் வவுணதீவு விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூபாய் ஐம்பத்தியெழு இலட்சமும் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here