தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் விஷேட நிகழ்வு தன்னாமுனையில்-இராஜங்க அமைச்சர் பெளஷி, பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு

0
309

எஸ்.எம்.எம்.முர்ஷித் & எம்.எஸ்.எம்.றிஸ்மின்
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் என்ற கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வு திங்கட்கிழமை தன்னாமுனை மியானி மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்எம். சுஹைர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, சிறுவர்கள் முதல் பெரியோர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக்கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் தொடர்பாக சத்தியப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.S1610001 S1610003 S1610006 S1610009 S1610015 S1610016 S1610019 S1610022 S1610025 S1610043 S1610065 S1610067IMG_5263 IMG_5274 IMG_5281 IMG_5288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here