கல்குடா செய்தியாளர்
மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பரா ஒலிம்பிக்-2017’ இற்கான தெரிவுப்போட்டிகள் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் திங்கட்கிழமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான், வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்தெரிவுப் போட்டிகளில் கலந்து கொண்டு தமது உடற்திறன்களை வெளிப்படுத்தினர்.
இப்போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள, கிழக்கு மாகாண சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மத்தியரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பரா ஒலிம்பிக்-2017’ இறுதிப்போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 5, 6ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.