நல்லாட்சியில் மதஸ்தானங்களுக்கு 14 வீத வருமான வரி

0
240

IMG_9717அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரி திருத்தச்சட்டத்தில் சகல மதஸ்தானங்களுக்கும் கிடைக்கும் வருவாயில் 14 வீத வரி அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளைச் சந்தித்த அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த 2006 இல் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரி சட்டத்திருத்தத்தில் சகல மதஸ்தானங்களுக்கும் எதுவித  வரிகளும் அறவிடப்படாதென அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அரசாங்கம் விரைவில் கொண்டு வரவுள்ள உத்தேச வரிச்சட்ட மூலத்தில் சகல மதஸ்தானங்களுக்கும் கிடைக்கும் வருவாயில் 14 வீத வரி அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மகா நாயக்க தேரர்களிடம் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் நிதி அமைச்சரினால் இந்த யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here