மக்களின் தெளிவிற்காக….ஐ ரோட் தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்

0
306
HRS_5328எம்.ரீ.ஹைதர் அலி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபைகயினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத்திட்டமாகும்.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 73.22 கிலோ மீற்றர் நீளமான வீதியினை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டமொன்று கடந்தாண்டு 10.05.2016ஆம் திகதி-செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.
இதன் போது, காத்தான்குடி பிரதேச அதன் அயல் கிராமங்களின் வீதிகளை உள்வாங்கும் விடயத்தில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் பின்வரும் வீதிகளை ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.
ஐ ரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்து வழங்கப்பட்ட வீதிகள் மற்றும் அவற்றின் விபரம் பின்வருமாறு…
புனரமைப்புச் செய்யப்படவுள்ள காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.
டெலிகொம் வீதி – 1.4 KM
புதிய காத்தான்குடி முஹைத்தீன் பள்ளிவாயல் வீதி – 1.5 KM
விடுதி வீதி – 0.4 KM
தீன் வீதி – 1.6 KM
புதிய காத்தான்குடி மத்திய வீதி – 0.4 KM
அப்ரார் வீதி – 0.7 KM
மெரைன் ரைவ் வீதி – 1.5 KM
புனரமைப்புச் செய்யப்படவுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.
காங்கேனோடை – ஒல்லிக்குளம் – மாவிலங்குதுறை வீதி – 2.5 KM
பாலமுனை வீதி வீதி – 1.13 KM
மீரா பள்ளி வீதி – 0.3 KM
புனரமைப்புச் செய்யப்படவுள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.
பூநோச்சிமுனை புதிய பாலமுனை வீதி – 0.9 KM
இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆந்திகதி-புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றது.
இதன் பிரகாரம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆந்திகதி-திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட மேற்குறித்த வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந் ஐ ரோட் வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள வீதிகளுக்கான மதிப்பீட்டுப்பணிகள் நடைபெற்று வருவதோடு, இன்னும் ஒரு சில மாதங்களில் இவ்வேலைத்திட்ட புனரமைப்பு வேலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்தகையதொரு நிலையில், ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுக்கு எத்தகைய சம்பந்தமுமில்லாத, முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படும் இந் ஐ ரோட் வேலைத்திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், பொய்யான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுவதுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே, போலியான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய அரசியல் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
10.05.2016ஆம் திகதி-செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆனையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஐ ரோட் திட்டத்திற்கான வீதிகளைத் தெரிவு செய்யும் கூட்டத்தொடரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஐரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை உறுதிப்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆனையாளர் அவர்களினால் கடந்த 18.05.2016ஆந்திகதி-புதன்கிழமை திகதியன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.
ஐ ரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்தி, அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சம்பந்தமான கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் அவர்களினால் கடந்த 20.03.2017ஆந்திகதி-திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மற்றும் வீதிகளின் விபரம் என்பன மக்கள் பார்வைக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றது.Comment HRS_5328 HRS_5329 HRS_5330 HRS_5332 HRS_5333 HRS_5334 HRS_5335 HRS_5336

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here