கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திறப்பு விழா

0
245

20106533_838018086377053_2875421330932694670_nகோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திறப்பு விழா சுகாதார வைத்திய அதிகாரி திருமதி F.S.M.வசீம் அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாழைச்சேனை மத்தி செயற்குழு மற்றும் இளைஞர் காங்கிரஸ்  உறுப்பினர்களின் எற்பாட்டில் கடந்த 13.07.2017 ம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு மிகவும் விமர்சயாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் கௌரவ இந்திரகுமார் நித்தியானந்தன், சுகாதார அமைச்சின் செயலாளர் K.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப்பணிப்பாளர் K.முருகாணந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள், பிரதேச பிரமுகர்களான அல்ஹாஜ் ULM. சுஹைப் (தேசமானி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்  ALM.லியாப்தீன் (JP), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் AL. பாரூக், அஸ்ரப் நற்பணி மன்றத்தலைவர் AM.ஹுஸைன் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் போது வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைக் கட்டுவதற்காக முன்னாள் தலைவர் மர்ஹும் அரவிமுத்து மரைக்காரினால் வாழைச்சேனை  முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு வக்பு செய்யப்பட்ட காணியின் சிறு பகுதி வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலினால் வழங்கப்பட்டு, அக்காணியின் காணிப்பத்திரம் மர்ஹும் அரவிமுத்து மரைக்காரின் மகன் AM.ஹுஸைன் அவர்களினால் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி F.S.M.வசீம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர் அவர்களும் மர்ஹும் அரவிமுத்து மரைக்காரின் மகன் AM.ஹுஸைன் அவர்களும் பொண்ணாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்.19905333_838017799710415_557118775207589679_n 19958879_838018269710368_4133935190047061406_n 19959026_838017979710397_1871809448102501430_n 19959180_838017853043743_4519379879938433692_n 19989469_838018153043713_6622530514846600369_n 19990460_838017836377078_1583304288464295161_n 20106395_838017999710395_1425990969146912136_n 20106533_838018086377053_2875421330932694670_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here