காத்தான்குடி ஆற்றங்கரை உடற்பயிற்சி நடைபாதை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

0
222

(ஆதிப் அஹமட்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும், நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி.எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி நடைபாதைக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்பப்பணிகளைப் பார்வையிடுவதற்காக நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி பிராதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர் நளீம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் நிராஜ் ஆகியோர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு பணிகளைப் பார்வையிட்டனர். IMG_20170718_084841 IMG_20170718_094847 IMG_20170718_094908 IMG_20170718_094910

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here