காத்தான்குடியில் வீதி விபத்து உயிரிழப்புக்களைத் தடுக்க பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நடவடிக்கை

0
245

ம்.ரீ. ஹைதர் அலி
காத்தான்குடிப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக அவரின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வீதி வேகக்கட்டுப்பாட்டுத்தடைகள் மற்றும் வீதி இணைவுப்பகுதிகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, காத்தான்குடி ஊர் வீதியுடன் வந்து இணையும் உள்ளக வீதிகளின் இணைவுப்பகுதிகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் சீர்செய்யப்பட்டதோடு, மில்லத் பாடசாலை முன்புறம் உள்ளிட்ட சில இடங்களில் வீதி வேகத்தடை அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் வீதி விபத்துக்களும் அவற்றினால் இடம்பெறும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதோடு, அவற்றை கட்டுப்படுத்துமுகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.HRS_2615 HRS_2677 HRS_2684 HRS_2705 HRS_2762 HRS_2825

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here