பழீல் பி.ஏ விற்கு புதிய வகை வைரஸ் தொற்று..!

0
256

IMG-20170719-WA0000ஷிபான் BM-மருதமுனை.
எப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூட்டமைப்பு தொடர்பில் வாய் திறந்தாரோ, அன்றிலிருந்து பழீல் பி.ஏ. யை கிலி ஆட்கொண்டுள்ளது. தமது இருப்பு, தவிப்பு, பதவியாசை, கதிரைக்கனவு அத்தனைக்கும் அதாவுல்லாஹ்வின் கூட்டமைப்புக்கான பச்சை சமிக்ஞை ஆப்பு வைத்து விடுமோ என்று அஞ்சுகிறார்.

ஆனால், இதுவரை தேசிய காங்கிரஸும் அதனுடைய தேசியத்தலைவர் அதாவுல்லாஹ்வும் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பான பகிரங்க அறிக்கையை வெளியிடவில்லை. ” கூட்டமைப்பு என்பது வெறுமினே ஹக்கீம் என்கின்ற தனி மனிதனை கிழக்கை விட்டும் துரத்தியடிப்பதற்கான கூட்டாக அல்லாமல் எதிர்காலச் சந்ததியினருக்கு அறம் சார்ந்த அரசியலை விதைத்துச்செல்லும் இஹ்லாஸான எண்ணத்துடன் ஒழுக வேண்டும்” என்பதே தலைவர் அதாவுல்லாஹ்வின் கோட்பாடாக இருக்கின்றது.

இவ்வாறான கண்ணியமான ஒரு தலைவருடைய எண்ணப்பாடுகளைக்கூட நாடிபிடித்துப்பார்த்து அறிக்கை விட முடியாதளவு கூட்டமைப்பு வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பழீல் பி.ஏ யின் நிலை நகைக்கவைக்கின்றது. இவரின் முகநூல் அறிக்கை அனைத்துமே அதாவுல்லா இணைய முன்பதாக தானே அடித்துச்சாகுகின்ற நிலையை உணர்த்தியுள்ளது.

அதாவுல்லாஹ் என்ற சக்தி இன்று கிழக்குத்தொட்டு வடக்கு வரை வியாபித்து விஸ்பரூபம் எடுத்துக்கொண்டிருக்கின்றது.  ஹக்கீமின் கிழக்கு இருப்பு தொடர்பில் தலைவர் அதாவுல்லா எடுக்கும் முடிவே தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகின்றது என்பதனை முற்கூட்டியே ஊகித்துக்கொண்ட ஹக்கீமின் நடுக்கம் அவரின் வால்களின் வார்த்தை வடிவமாகப் பரிணமிக்கின்றது.

ஆகவே தான், பழீல் பி.ஏ போன்றோர் அதிகாரமில்லாமலேயே ஆட்டுவிக்கும் தலைமை மீது தமது ஆத்திரத்தையும் எரிச்சலையும் வைரஸ் வடிவில் கொட்டித்தீர்க்கின்றனர். ஹக்கீமிடமிருந்து 17 வருட அரசியல் வாழ்வில் தெரு விளக்கு அபிவிருத்தியைப் பெற்றுக்கொண்ட பி.ஏ தெருவோரம் நிற்கப்போகின்ற நாள் தொலைவில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here