புணானையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு

0
188

கல்குடா செய்தியாளர்

மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவ 23வது படைப்பிரிவு புணாணை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

புணாணை 23வது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பன்னவல தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் என்.சேனாதீர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இராணுவ உயரதிகாரிகள், கோறளைப்பற்று மத்தி உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மாற்றுத்திறனாளிகள், மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிலியந்தலையைச் சேர்ந்த மாணிக்க கல் வியாபாரியும், தனவந்தருமான பிரியங்க புஸ்பகுமார என்பவரின் நிதியுதவியின் மூலம் ஐயாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.01 02 03 04 05 06 07 08 09 10 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here