பொருளாதார மத்திய நிலையம் களுதாவளையில்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
266

1186714_488080097950573_1481589943_nஎம்.எஸ்.எம்.முர்ஷித்
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு களுதாவளையில் எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இந்நகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மறுவாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், அதன் உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here