நல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

0
287

unnamed (3)நல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இஸ்லாமிய அமைப்பு ஒன்று அவரை சந்தித்து அல்குர்ஆன் சிங்கள பிரதி ஒன்றை கையளித்த போது கடந்த காலத்திலும் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.

அங்கு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அலுத்கமை உள்ளிட்ட சில சம்வங்கள் தொடர்பில் கூறுபவர்கள் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தான் செய்த அளப்பரிய சேவைகளைப் பற்றி யாரும் நினைவு கூறுவது இல்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிண்ணியா மூதூர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் விடுதலை புலிகளால் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றி எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி அலுத்கமை சம்பவத்தை அந்த சம்பவத்தோடு கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

இந்த நல்லாட்சியின் முக்கியஸ்தர்களே அலுத்கமை சம்பவத்திம் சூத்திரதாரிகள் என கூறிய அவர் அதனால் தான் அதற்கு எதுவித நீதி நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என கூறினார்.

உங்கள் ஆட்சியில் புத்த பெருமானை அவமதித்து கருத்து கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட  நபர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டது ஆனால் நல்லாட்சியில் ஞானசார தேரரை அவமதித்தாக குறித்த நபர்  ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என குறித்த  கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒருவர் குறிப்பிட

நால்லாட்சிக்கு புத்த பொருமானை விட ஞானசார தேரர் பெரியவர் என புன்னகைத்தவாரே மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here