அநுராதபுரம் ஸாஹிராவில் நீர் சுத்திகரிப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நடல்

0
245

20108414_683816035141179_5524577062686946924_n(அஸீம் கிலாப்தீன்)
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வுகள் நேற்று 20.07.2017ம் திகதி வியாழக்கிழமை காலை வித்தியாலய அதிபர் எம்.கே.எம்.ஜாபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்களில் ஒருவரும் அநுராதபுரத்தின் மூத்த ஆசிரியையுமான ஹாஜியானி என்.ஆர்.தாஜூதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக வட மத்திய மாகாண கல்வித்திணைக்கள தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் ஈ.பீர்முஹமட், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திருமதி வக்கும்புற. மௌலவி அல்ஹாஜ் ஏ.சி.மெஹ்பூப் (மிஸ்பாஹி ), அநுராதபுரம் கதீஜா ஜாமியா பள்ளிவாசல் நிருவாக குழுத்தலைவர் முஹ்ஸின் உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கச் செயலாளர்கள், நிருவாகக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்நீர் சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் இப்பாடசாலைக்கு கிடைக்க இப்பாடசாலை ஆசிரியரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான கே.எம்.எம்.ரபீக் அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது.
15978098_683815108474605_8789798505560553175_n 20106700_683816315141151_4345349577884375506_n 20108302_683823961807053_6645203135547999573_n 20108414_683816035141179_5524577062686946924_n 20140169_683815921807857_7311106593166105546_n 20228406_683816351807814_2143977603002003097_n 20228508_683816241807825_3868740849258585385_n 20228615_683814985141284_8699370139260554967_n (1) 20228722_683816171807832_6925554130204139050_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here