வடமுனையில் தற்காலிக பொலிஸ் நிலையம்

0
247

IMG_0343செய்தியாளர் எம்.ஐ.அஸ்பாக்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை ஊத்துச்சேனைக் கிராமம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 45 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்திலுள்ள மக்கள் தமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக பல கிலோ மீற்றர்களைக் கடந்து செல்கின்றனர். அதில் ஒன்றுதான் பொலிஸ் சேவையாகும்.

பொலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமாயின், வாழைச்சேனைக்கு சென்று பல மணி நேரங்கள் பயணித்து இதற்காக ஒரு நாளை செலவிடுகின்றனர். இதற்குத்தீர்வு காணும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினூடாக குறிப்பிட்ட கிராமத்தில் தற்காலிக பொலிஸ் சேவை நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் தேவைகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலில் நேற்று 20.07.2017ம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெரமுனை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மாஅதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் சமூக சேவைப்பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, குறிப்பிட்ட கிராம மக்களுக்கு தென்னங்கன்றுகளும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரகணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.IMG_0343 IMG_0352 IMG_0369 IMG_0372 IMG_0382 IMG_0403 IMG_0423 IMG_0427 IMG_0434 IMG_0458 IMG_0479

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here