பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்-கல்குடா நேசன்

0
136

Untitled-1இலக்கியப்படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் எனப் பல்முகங்கொண்ட மாவனெல்லை எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுடனான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி அவர்களின் நேர்காணலில் கடந்த 02.07.2017ம் திகதியன்று ராவய சிங்கள வார இதழில் வெளிவந்த சிங்கள மொழியிலான நேர்காணலின் தமிழ் மொழி பெயர்ப்பை கடந்த 16.07.2017ம் திகதி எமது கல்குடா நேசன் இணையத்தளத்தில் (http://kalkudahnation.com/80479) வெளியிட்டிருந்தோம். 

மிகவும் ஆக்கபூர்வமான, ஆழமான கருத்துக்கள் நிறைந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் நேர்காணல் எமது கல்குடா நேசனில் வெளிவந்தமை தொடர்பிலும் அதனை வாசகர்கள் குறித்த இணைப்பில் பார்வையிட முடியுமெனும் உளப்பூர்வமான அறிவிப்பு தொடர்பிலான பதிவொன்றையும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது சொந்த இணையத்தளத்தில் (http://www.jeyamohan.in/100610#.WXEl0FFLfIU) வெளியிட்டு எம்மை பெருமைப்படுத்தியமைக்கும் அதனூடாக எமது கல்குடா நேசன் இணையத்திற்கு பரந்துபட்ட அறிமுகமொன்றை வழங்கியமைக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

எம்.ஐ.லெப்பைத்தம்பி
ஆசிரியர்
கல்குடா நேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here