அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்: முகாமைத்துவ சபை நாளை கூடுகிறது

0
129

– றிசாத் ஏ காதர் –
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம் நாளை சனிக்கிழமை கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையைச் சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் கையொப்பமிட்டு எழுத்து மூலமான கோரிக்கையொன்றினை அண்மையில் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவின் தலைமையில் சங்கத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முகாமைத்துவ சபைக்கூட்டத்துக்கான அழைப்புக்கடிதம் சங்கத்தின் செயலாளருடைய கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here