மைதானம் தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு

0
290

sscfrerஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.முகம்மது சதீக்
மட்.மம-ஓட்டமாவடி தேசிய பாடசாலை அண்மையில் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. தற்போது ஓட்டமாவடி தேசிய பாடசாலையிக்கு 120×95 அடியிலான கலையரங்கு கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இக்கலையரங்கு கட்டடம் இப்பாடசாலையின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மைதானத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள்  எதிர்காலத்தில் பாதிக்கும் என்ற அடிப்படையிலும் மற்றும் மைதானத்தின் பரப்பளவைக்குறைக்கும்.

ஆனால், இக்கலையரங்கை இம்மைதானத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கலையரங்கைக் கட்டுவதற்கு இடமுள்ளதென்றும் இக்கலையரங்கு கட்டடத்தை இப்பாடசாலையின் தொழிநுட்ப ஆய்வுகூடத்துக்கு அருகாமையில் இக்கட்டட வேலைகளை ஆரம்பிக்குமாறு  மாணவர்கள் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் அவர்களுக்கு மகஜரொன்றை நேற்று 21.07.2017ம் வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர்.

இப்பாடசாலையின் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கு இம்மைதானம் மிகவும் பிரதானமானது. அது மாத்திரமல்லாது, மாணவர்களின் உடலியற்றிறன்கள் குறைவடைந்து வருவதனை அவதானித்த  கல்வியமைச்சு மாணவர்களுக்கான உடற்பயிற்சி, விளையாட்டை அதிகரிக்க அண்மையில் வலியுறுத்தியிருந்தது.

இப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்ச்சிகள், சாரணர் இயக்கம், கடெட் படை, முதலுதவி மற்றும் ஏனைய இதர செயற்பாடுகளுக்கும் இம்மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இம்மைதானம் விளையாட்டுச் செயற்பாடுகள் மூலம் இப்பாடசாலை மாணவர்கள் மாகாண, தேசிய மட்டம் வரை தமது திறமைகளை நிரூபித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலைக்கு பல அபிவிருத்தித்திட்டங்கள் வருகின்ற போது, இம்மைதானத்தின் பரப்பளவு குறைவடைந்து இப்பாடசாலையில் சில குறிப்பிட்ட மைதான நிகழ்ச்சிகள் மாத்திரம் நடைபெறும். அல்லது இம்மைதானம் பாடசாலையின் முற்றமாக மாற்றம் பெறும்  சந்தர்ப்பத்தில், இப்பாடசாலை மைதானத்திற்கான மாற்றுக்காணிகள் பாடசாலைக்கு வழங்கப்படுமா? என்ற கேள்வி சகலருக்குமுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here