கல்குடாத்தொகுதி மக்கள் கோழைகளா???

0
252

IMG_20170722_071033மஹ்றூப் முஹம்மது றிஸ்வி

நவீன ஒரு சமூகத்தை மூன்று வகையான சக்திகள் வழிநடாத்த வேண்டும்.

1. களத்திலுள்ள பிரச்சினைகளை  ஆய்வு செய்து விழிப்புணர்வுடனான கருத்துப்பரிமாறல் மற்றும் திட்டமிடல்களை செய்யும் ஒரு கூட்டம்.

இவர்கள் தெளிவான அதிகார , படித்த, பணபலப்பின்புலங்களை நெறியாயளக்கூடிய இளமை ததும்பும் ஆளுமைகளாக இருப்பர்.

எல்லோரும் களத்தில் செயற்படவோ அல்லது எல்லோரும் களத்தை திட்டமிடவோ அல்லது  எல்லோரும் சமாதானம் பேசவோ முடியாது. அதுதான் நியதி.

எனவே, இவர்கள் களத்தை திட்டமிட்டு கள செயற்பாட்டாளரகளை ஒழுங்குபடுத்தி அவர்கள் பின்னால் அணிதிரள்பவர்களாக இருப்பர்.

இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.  அது பிரச்சினை என்று வரும் போது எதிரிகள் சமூகத்திலுள்ள கல்விமான்கள் மற்றும் ஆளுமைகளையே குறிவைப்பர்.

இதனால் ஏற்படும் இழப்பு அதிகம். எனினும் இவர்களைப் பாதுகாக்கும் டிபென்டர்களாக சாதாரண ஏனைய சமூக உணர்வுள்ள மக்கள் மாறி வழிகாட்டல்களுடன் களத்தில் முன்னின்றால் அங்கு எழுகின்றன சக்தி சுனாமி போன்றது.

அதற்காக மேற்படி முதலாம் அணியினர்  கோழைகளாக வாழ வேண்டும் என்பது கருத்தல்ல. மாறாக, இறுதியில் தான் மூச்சு போகும் என்பதே கருத்து.

2. சாதாரண கள செயற்பாட்டாளர்கள்.

இவர்கள் ஏற்கனவே நாம் சொன்னது போல் பிரச்சினைகளை நேரடியாக முகம் கொடுக்க கூடியவர்கள்,

டிபென்டர்கள். உதாரணமாக ஒரு பொலிஸ் கேஸ் வரும் போது இவர்களை அதிலிருந்து மீட்கக்கூடிய திட்டமிடல் குழு பின்னால் இருப்பின் அரசாங்க தொழில் போயிருமே படித்து விட்டு வேறு கைத்தொழில் செய்ய முடியாதே என்ற பிரச்சினை இருக்கவே இராது. ஆக சுனாமி தாக்கம் பாரியது.

3. இவர்கள் முதுமை அடைந்த சமூக ஆளுமைகளாக இருந்து நடுநிலை நீதி நேர்மை போன்றன பேணி பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக் கூடியவரகளாக இருப்பர்.

இங்கு மேற்சொன்ன இரு கூட்டங்களும் தமது கடமையை சரிவர செய்வதன் பிற்பாடே அதாவது எதிரி மீது எமது கை ஓங்கியுள்ள நிலையிலேயே சமாதானத்திற்கான வாயில் திறக்கப்படுவது ஆகச்சிறந்தது.

எதிரியும் நானே நண்பனும் நானே என்ற சித்தாந்தம்  கொண்டிருப்பின் விளைவு உச்சம்.

இந்தப் பின்னணியில் எமது ஊரில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதென்பது சாதாரண விஷயம்.

உதாரணமாக உள்ளூருக்குள் போதையுடனோ மடமையுடனோ வேகமாக பைக் ஓட்டும் போது திட்டமிட்ட கள செயற்பாட்டாளர்கள் (அணி 2)  அவர்களை வலிந்து பிரச்சினைக்குட்படுத்த அதை முதலாம் அணி நன்கு ஜனரஞ்சகப்படுத்தி சட்டப்பிரச்சினையாக்கி எதிரியை சட்டத்திலும் தனிமைப்படுத்த எதிரி என்ன பெரிய கொம்பன் என்றாலும் உள்ளுக்குள் பயம் பீடிக்கும். கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலை நிர்ப்பந்தமாகும். இங்கு அநியாயம் எனபது எந்த சந்தர்ப்பத்திலும் நிகழக்கூடாது.

இறுதியாக எமது கல்குடா  தொகுதி மக்கள் கோழைகளல்ல என்பது புலப்படும்.

#இது_சாத்தியமாகுமா? என்று யோசிப்பவர்களுக்கு தமிழரசுக்கட்சி  அரசில் எதிர்க்கட்சியாக உள்ள போதும் தமிழர் பேரவை ஏன் உருவானது என்று வெறுமனே அன்றி ஆய்வு செய்து பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here