கதிரலைகளின் ஓலம்….

0
275

images

(முனையூரான் – எம்.எம்.ஏ.ஸமட்)

பாவம் மானிடர்..!
எத்தனை உள்ளங்களை
நான் அலைய வைக்கிறேன்
அவதியாக்குகிறேன்..
இரவும் தெரிவதில்லை..!
பகலும் புரிவதில்லை..!
பேயாய் அலைகிறார்கள்
என் ஊடுறுவலால்…
ஸ்மாட்போன்களையும் டெப்லெட்டுக்களையும்
ஏந்திக்கொண்டு…
கண்களைத் தலாட்டும்
எத்தனை ராத்திரிகளை
இந்த பேய் உள்ளங்கள்
துரத்தியிருக்கின்றன..
போன்களை செவியோரங்களில்
உறங்க வைத்தபடி..
அரச அமைச்சொன்று
சொல்கிறது….
இடரிவிழும்
தொல்லை
தொலைபேசி இலக்கங்களினால்
வாழ்க்கையை
தொலைத்து நிற்கிறார்கள்
பல -இளசுகள் என்று..
என்னைக் கருவாய்க் கொண்டு
படைக்கப்பட்ட
படைப்புக்களினால்
எத்தனை பேர்
காதல் கொள்கிறார்கள்..
பாவம் அவர்கள்..
காதல் புனிதமானதென்று
காதலின் பெயரால்
எத்தனை காமுவர்கள்
என்னால்
காமம் தீர்க்கிறார்கள்
பல – காரிகைகளுடன்…
இவர்களெல்லாம்
நல்லவர்களாக…
வல்லவர்களாக…
மனித உள்ளங்களை
ஆற்றுப்படுத்துபவர்களாக…
சமூக சேவையாளர்களாக…
தங்களை
அடையாளாம் காட்டித்தான்
அத்தனை உள்ளங்களையும்
ஏமாற்றுகிறார்கள்
இல்லை
அழிக்கிறார்கள்
என்னைக் கொ(ன்று)ண்டு…
சுருண்டு கொள்ளும்
உலகத்தினினுள்
சுணக்கமின்றி
சுருக்கமாய்
என்னைக் கொண்டு
அத்தனையையும்
நலமாக செய்து கொள்ளவே தான்
படைத்தான்
அந்த – ஞானியல்ல
விஞ்ஞானி
கைபோனையும் கணணியையும்
ஆனா..
நான் இப்ப நினைக்கின்றேன்
அவன்
செய்தது
அவனையே நிந்திக்குமென்று…
ஒன்று மட்டும்
உண்மை…
என்னைக் கொண்டு உருவாகியவை
எப்படி இருந்தாலும்
அவன் அவனாக…
அவள் அவளாக…
வாழும் போது
எவனோ..
எவளோ..
உன்னை
உன் வாழ்வை
உரசிப்பார்க்கவே முடியாது
ஆனா..
ஆயிரத்தில்
ஒருத்தனோ..
ஒருத்தியோ தானே
ஏமாறாமல்
ஏமாற்றாமல்
வாழ்க்கையையோடு ஓடுகிறார்கள்..
பரிதாபப்படுகின்றேன்…
என்னைக்
கருக்கொண்ட
கருவியாக வெளி வந்து
அதனால்
கசங்கிப்போகும்
உள்ளங்களை நினைத்து…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here