படிப்பினை தரும் சிங்களத் தொழிலதிபரின் முன்மாதிரி: யாசிப்பவனை வெறுக்காதீர்

0
293

66390.gifஆரிப் எஸ்.நளீம்

எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகின்ற, நாளொன்றுக்கு இலட்சங்கள் புரலும் சிங்களவர் ஒருவருக்குச்சொந்தமான வியாபார நிலையம். அங்கே வாடிக்கையாளர்கள் காக்க வைக்கப்பட்டாலும், யாசகர்கள் காக்க வைக்கப்படமாட்டார்கள். இதனைத்தொடர்ந்து அவதானித்து வந்த நான், ஒரு தடவை இது பற்றி அந்தக்கடை முதலாளியிடம் கேட்டேன்.

அவர் எனக்கு சொன்ன பதில், அவர் மேலே நான் வைத்திருந்த நல்லெண்ணம் இன்னும் அதிகரிக்கக் காரணமாயிற்று. நம்மை நாடி வரும் யாசகர்களுக்கு நாம் வழங்குவது வெறும் ஐந்து, பத்து. என்னைப் பொருத்தமட்டில் பிச்சைகாரன் வடிவில் வருபவன் இறைவனாக எண்ணுகிறேன். இறைவனைக் காக்க வைத்தல் கூடாது. இறைவன் தானே நம்மிடம் செல்லுமாறு வாடிக்கையாளர்களை அனுப்பி வைக்கிறான் என்றார். நான் இருபது ஆண்டுகளுக்கு முன் கந்தளாய் நகரில் ஒரு சிங்களத் தொழிலதிபரிடம் கற்றுக்கொண்ட இந்த நல்ல செயலினை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

மாறாக, இன்றைய முஸ்லிம் வியாபாரிகள் பலரிடம் எம் அவதானத்துக்குள்ளாகி வருகின்ற ஏற்றத்துக்கு மாற்றமான செயல் யாதென்றால், யாசகன் கடை வாசற்படியிலே முதலாளி என்பான். ஹாஜியார் என்பான். முதலாளியினதோ அல்லது அங்கே வேலை பார்ப்பவர்களின் கண்களோ, காதுகளோ அவன் பக்கம் சற்றேனும்  திரும்பவே திரும்பாது.

காத்திருந்து இடத்தைக் காலி செய்வான் அல்லது பொருள் கொள்வனவுக்காக வந்திருந்த இந்த முஸ்லீம் வியாபாரியின் குணத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் ஒருவன், தன் பொக்கட்டிலிருந்த சில்லரையை வழங்கி விட்டு, ஹரி யன்ட என்பான்.

யாசகன் குதிரை மேல் ஏறி வந்தாலும், வழங்குங்கள் என்றார்கள் நபிகள் கோமான் அவர்கள். மிகச்சிறிய செயல் பெரிய கூலியைப் பெற்றுத்தரும். ஆனாலும், பெரிதாக எதிர்பார்த்து பைல்களுடன் வருபவர்களிடம் அவதானமாக தீர ஆராய்ந்து கொஞ்சம் நேரமெடுத்து வழங்குவதில் தவறில்லை.

விடயம் உண்மையெனின் தாராளமாக வழங்குங்கள். செயல்களுக்கான கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here