தலைமைத்துவப்போட்டியை மறந்து முஸ்லிம் கட்சித்தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் – அமைச்சா் பைசா் முஸ்தபா

0
291

(அஷ்ரப் ஏ சமத்)

ymma14அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 67வது வருடாந்த மாநாடு இன்று(23) கொழும்பு -07 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லுாாியில் அதன் தலைவா் தௌபீக் சுபைர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சா் பொறியியலாளா் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டனா். இந் நிகழ்வின்போது சிறந்த வை” விருது தோ்தல் ஆணையாளா் சுகந்த தேசப்பிரியவிற்கு வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த கிளைகளுக்கும் அதிதிகளினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டுக்கான தலைவராக அக்கரைப்பற்றிளைச் சோ்ந்த எம்.என்.எம் நபீல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாவது –

இந்த நாட்டில் 8 வீதமாக வாழும் முஸ்லீம்களில் பல முஸ்லீம் கட்சிகள் எல்லோரும் தலைவா்களாக வேண்டும். ஒவ்வொருவரும் அரசியல் செய்யவேண்டும். இவ்வாறு நாம் சென்றால் எமக்குள் எவ்வாறு தேசிய பிரச்சினைகளில் ஒன்றுமை ஏற்படுவது? இந்த வை.எம்.எம். ஏ கூட மறைந்த அறிஞா் அசீலஸ் அவா்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் 67 வருடங்கள் முடிவடைந்துள்ளது. தலைமைத்துவம் ஒரு குடையின் கீழ் மற்றவா்களுக்கு தலைமைத்தவத்தினைக் கொடுத்து அங்கத்தவா்களாக இருந்து இவ் இயக்கத்தினை சமுகம் சாா்ந்த விடயங்களில் ஒன்றுபட்டு ஜக்கியமாக உ்ளளனா்.

இங்கு உரையாற்றிய தோ்தல் ஆணையாளா் மாகாணசபை உள்ளுராட்சித் தோ்தல்களை நடாத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இத்தோ்தலை வேண்டுமென்று பிற்போடவில்லை. உள்ளுராட்சித் தோ்தலில் முன்னைய அமைச்சா் காலத்தில் எல்லைநிர்ணயக் குழுவின் அறிக்கையினாலேயே தோ்தல் பின்போடப்பட்டது. எல்லைய நிர்ணயக்குழுவின் அறிக்கை முடிவடைந்துள்ளது. மிகவிரைவில் உள்ளுராட்சித் தோ்தல் நடாத்தப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் தோ்தல் ஆணையாளாருக்கு தற்போதுள்ள ஜனநாயக சுதந்திரம் அன்று இருக்க வில்லை. அதற்காகவே இந்த நாட்டில் சிறந்ததொரு ஜனநாகத்தினை கொண்டுவருவதற்கே இத் தோ்தல் நடாத்தப்பட்டது. என அமைச்சா் பைசா் முஸ்தபா உரையாற்றினாா்.

தோ்தல் ஆணையாளா் இங்கு உரையாற்றும்போது.

நாம் நமது தோ்தல் கடமையைச் சரிவரச் செய்கின்றோம். தோ்தல் ஒன்று நடந்து ஒரு சபையின் ஆட்சிக் காலம் முடிந்ததும் உடனடியாக தோ்தல் ஆணையாளருக்கு அறிவித்து ஜனாநாக தோ்தலை நடாத்துவது தான் ஒரு நாட்டின் சிறந்த ஜனநாயகம் அதனை பிற்போடுவது அந்த மக்களது ஜனாநாயகம் மறுக்கப்பட்டு வருகின்றது. மக்களிடம் உள்ளது ஒரே ஒரு ஜனநாகம் தோ்தல் காலத்தி் அவா்கள் வாக்குச் சீட்டில் இடுவதற்கும் பாவிக்கும் பெண்சில் மட்டும்தான் இதனை அரசியல்வாதிகள் அரசாங்கம் உணா்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா்.(F)ymma4 ymma7 ymma9 ymma10 yummm17 yyma1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here