மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் புணரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.

0
208

(ஆதிப் அஹமட்)

14479760_1064553166994017_7847699348838125658_nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழுக்கள் புணரமைப்பு செய்வதற்கான தீர்மானம் கடந்த 19.07.2017 அன்று கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு தோறும் கிராம மட்டத்திலிருந்தே கட்சியை மீள் புணரமைப்பு செய்வது தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டது.முதல் கட்டமாக மாவட்ட மத்திய குழுக்களை புணரமைத்து தொடர்ந்து கிராம மட்டத்தில் கட்சியை புணரமைத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை புணரமைப்பதற்கான ஏற்பாட்டாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here