கிழக்கு முதலமைச்சரின் எண்ணக்கருவில் மட்டு. ஆரையம்பதியில் சுற்றுலா தகவல் மையம்.

0
268

(முதலமைச்சர் ஊடகப்பிரிவு)

ஆரய 03மட்டக்களப்பு ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள சுற்றுலாத்தகவல் மையம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று (25.07.2017) நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன் போது  அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தந்ததுடன், அதன் நிர்மாணப்பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சுற்றுலாத்தகவல் மையத்தில் பயிற்சிக்கூடங்கள், கலாசார மண்டபங்கள் மற்றும் வர்த்தகத்தொகுதிகள் எனப்பல்வேறு அம்சங்கள்  அடங்குகின்றன.

இதன் மூலம் குறித்த பகுதியைச்சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களும்  ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதுடன், கிழக்கின் சுற்றுலாத்துறை அமைச்சரான கிழக்கு முதலமைச்சரின் நீண்ட காலக்கனவான கிழக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் இதுவொரு மைற்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரய 02 ஆரய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here