ஓய்வு பெறும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவுக்கு கிழக்கு முதலமைச்சர் நேரில் சென்று பிரியாவிடை

0
245

(கிழக்கு முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)

111கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி  ஓய்வு பெற்றுச் செல்லும் சுமித் எதிரிசிங்க அவர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேரில் சென்று சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

இதன் போது  கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கு கிழக்கு முதலமைச்சர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஓய்வு பெற்றுச்செல்லும் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மாஅதிபர் சுமித் எதிரிசிங்க அவர்கள் 1978ஆம் ஆண்டு உபசேவை உபபொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து பல உயர்பதவிகளைப் பெற்றுதனது 39 வருட சேவையின் பின் நாளைய தினத்தோடு 60 வயதைப் பூர்த்தி செய்பவராக ஓய்வு பெற்றுச்செல்லுகின்றார்.222 333

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here