கைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு?

0
148

IMG_0012 (1)அ.அஹமட்

குருநாகல்-மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பலசேனா உறுப்பினர்கள் வழக்கிலிருந்து முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஞானசார தேரரைக்கைது செய்ய பொலிஸார் குருநாகலைப் பிரதேசத்தில் அவரைச்சுற்றி வளைத்தமையின் வெளிப்பாடாக குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டது. அதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பலசேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது, அவர்கள் அந்தக்குற்றத்தைப் புரிந்தார்கள என்பதற்கு தகுந்த சாட்சியங்களில்லையென பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் எவரையும் கைது செய்ய வேண்டாமென நீதிபதி பொலிஸாருக்கு கடும் தொணியில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பலசேனா உறுப்பினர்கள் சீ சீ டீ வி ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக முன்னாதத் தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது தகுந்த ஆதாரமில்லையென பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சீ சீ டிவி ஆதார அடிப்படையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், கைது செய்யப்போதுமான ஆதாரம் அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கத்தகுந்த ஆதாரமில்லாமல் போனது எவ்வாறு என்பதற்கு நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு பதில் கிடைப்பது சந்தேகமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here