ESDF நிறுவனத்தினால் ஓட்டமாவடி பிரதேச சனசமூக நிலையங்களுக்கு காகிதாதிகள் வழங்கல்

0
154

6எம்.எம்.பைறூஸ்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குள் இயங்கி வரும் 11 சனசமூக நிலையங்களின் அலுவலகப் பாவனைக்காக ரூபா 2000.00 பெறுமதியான காகிதாதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

சனசமூக நிலையங்களினை வலுப்படுத்துவதனூடாக பொது மக்களுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்குடன் ESDF நிறுவனத்தினால் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு காகிதாதிகள் வழங்கும் நிகழ்வு. நிறுவனம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிராம சேவகர் பிரிவு வாரியாக இயங்கி வரும் ஓட்டமாவடி – 01 வடக்கு அல் ஹிக்மா சனசமூக நிலையம், ஓட்டமாவடி – 01 தெற்கு முஸ்லிம் சனசமூக நிலையம், ஓட்டமாவடி – 02 அல்-ஹிரா சனசமூக நிலையம், ஓட்டமாவடி – 03 மத்திய சனசமூக நிலையம், மீராவோடை கிழக்கு மீராவோடை சனசமூக நிலையம், மாஞ்சோலை – மாஞ்சோலை சனசமூக நிலையம், தியாவட்டவான் நூர் சனசமூக நிலையம், புணானை மேற்கு மயிலந்தனை சனசமூக நிலையம், கல்லிச்சை – கல்லிச்சை சனசமூக நிலையம், ஊத்துச்சேனை வீரநகர் சனசமூக நிலையம், காவத்தமுனை – காவத்தமுனை சனசமூக நிலையம் ஆகியன காகிதாதிகள் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக உத்தியோகத்தர் வ. தேவநேசன் மற்றும் ESDF நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான வீ.தயாநிதி, எம். விமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.1 2 3 4 5 6 7 8 9 10

Insert into post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here