மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மட்டு.மாவட்டத்திற்கான சேவை என்றும் நினைவுகூறப்படும்-அனுதாபச் செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
213

ffஎஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் சமூக சிந்தனையாளரும் சட்டத்தரணியுமான ஏ.ஆர். மன்சூரின் மறைவு செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலையடைகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் மரணச்செய்தி தொடர்பில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக இருந்து மாவட்டத்தின் அபிவிருத்தியில் அதிக பங்கினைச் செலுத்தியதுடன், தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவுக்காக மிகவும் பாடுபட்ட தலைவராவார்.

அவரது அரசியல் காலத்தில் கல்முனைத் தொகுதிக்கான பிரதிநிதியாக மாத்திரம் செயற்படாமல், நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றியுள்ளதுடன், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி கல்விக்கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர் என்பதனை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அன்னாரின் இழப்பால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என பிரதியமைச்சர் தந்து அனுதாபசெய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here