தமிழ்க்கூட்டமைப்புடன் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒப்பிட முடியுமா?

0
252

sketch-1501042472679பிர்தெளஸ் ஹனிபா கல்முனை.
தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் என்பவர்கள் கொள்கைவாதிகள். கொண்டதே கொள்கை மக்களின் நலனில் எப்போதும், அக்கறை கொண்டவர்கள். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பவர்கள் அரசியல் வியாபாரிகள்.

எப்பக்கம் அதிக இலாபம் பதவி சொகுசு கிடைகின்றதோ அந்தப்பக்கம் ஆதரவு கொடுப்பவர்கள். பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பவர்களுக்கு கொள்கையென்பதே கிடையாது. முற்று முழுதாக சுயநலம், பதவி, பட்டம், சொகுசு என இப்படிப்பட்டவர்கள் எப்படி தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பிட முடியும்? மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு.

வடகிழக்கில் முஸ்லிகளுக்கெதிராக பல தரப்பட்ட விடயங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால், கொள்கை கொண்ட தமிழ்க் கூட்டமைப்புடன் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை கூட செய்ய முடியாத இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரத்தரப்புக்கள் எப்படி தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பிட முடியும்?

தமிழ் கூட்டமைப்புக்கு வந்த அமைச்சு வாய்ப்பு
மகிந்த ஆட்சி தொட்டு மைத்திரி ஆட்சி வரை பிரதமர் மற்றும் பாதுகாப்பு தவிர்ந்து சபாநாயகர் மற்றும் 4 முழு அமைச்சு, 4 பாதி அமைச்சு தேடி வந்தது. அவைகளை தமிழ்க் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது. தமிழ்க்கூட்டமைப்பு விரும்பியிருந்தால், இன்னும் 2-3 அமைச்சுகளைப் பேசிப்பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், அவைகளை சம்பந்தர் விரும்பவில்லை. இந்த வாய்ப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கிடைத்தால், சொல்லவா வேண்டும்? அமைச்சுக்கு என்றே ஆலாப்பறக்கும் முஸ்லிம் அரசியலுக்கு இப்படி வாய்ப்புக்கள் ஒரு போதும் தேடி வருவதில்லை. காரணம், முஸ்லிம் அரசியல் என்பது எந்தக்கட்சியுடன் கூட்டு என்று வந்தாலும், அவர்கள் முன்வைக்கும் முதல் கோரிக்கை முழு அமைச்சு மற்றும் 2-3 பாதி அமைச்சு வழங்க வேண்டுமென்பதே.

எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் தான் சார்ந்த சமூக சிந்தனையென்பதே கிடையாது. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம். காலம் கடந்த ஞானம். இந்த ஹசன் அலிக்கும் பஷீர் சேகுதாவூத்துக்கும் ஹக்கீம் இலவச எம்பி கொடுத்திருந்தால், இந்த ஞானோதயம் வந்திருக்குமா?

இந்த இருவரும் இறக்கும் வரைக்கும் ஹக்கீம் இலவச எம்பி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் என்றுமே இருந்தார்கள். இலவச எம்பி இனி மேல் ஹக்கீம் தரமாட்டார் என்ற உறுதியான முடிவுக்கு வந்த பின்னர் தான், இந்த இருவரும் இந்தக்கூத்தமைப்பு என்ற ஒரு காமடியைக் கொண்டு வரப்பார்கின்றார்கள்.

இந்த இருவரும் ஹக்கீம் கட்சியில் இலவச எம்பி தொட்டு அமைச்சர் பதவி வரைக்கும் நன்றாக அனுபவித்த போது, இந்த சிந்தனை ஒரு போதும் வரவில்லையே! இப்போது இந்த இருவருக்கும் இலவச எம்பி ஹக்கீம் கொடுக்கவில்லையென்ற ஆத்திரத்தில், கோபத்தில் ஹக்கீமை பழி வாங்க வந்த சிந்தனை தான் இந்தக்கூத்தமைப்பு.

அமைச்சர் றிசாத், அதாவுல்லாஹ், ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹக்கீமை எதிர்க்கும் எல்லோரும் ஒரு அணியாக நின்று ஹக்கீமைத் தோற்கடிக்கும் எண்ணமே இந்தக்கூத்தமைப்பு. ஆனால், இந்தக் கூட்டமைப்பில் அமைச்சர் றிசாத் மட்டுமே பலமாகவுள்ளார். உண்மையில், அம்பாறை மாவட்டத்தில் இந்த ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் எந்தப்பக்கம் நின்று பரப்புரையில் இறங்கினாலும், வாக்களிக்கவிருக்கும் மக்கள் இவர்களைக் கண்டால் வாக்களிக்கமாட்டார்கள்.

காரணம், இலவச எம்பி கொடுக்காத ஒரே காரணத்தில் தான் இவர்கள் இந்த கூத்தும் கோமாளியும் என்பது சாதாரண பாமரனுக்கும் தெரிந்த விடயம். ஹசன் அலி அணி என்பது வெறும் சில்லறை செல்லாக்காசு. இதை நம்பி இன்னும் 2-3 சில்லறைகள். அதிலும் விசேடமாக பாலமுனைக்காரர் தனது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, அரசியல் தற்கொலை செய்யப்போகின்றார்.

ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் ஏறிச்செல்ல ஒரு வண்டி தேடுகின்றார்கள். அந்த வண்டி தான் கூட்டமைப்பு. இவர்கள் இருவரும் அவர்களின் ஊர்களில் தங்கள் அரசியலை வளர்க்காமல் தங்களையும் வளர்க்காமல் சும்மா டம்மி பீசாக வளம் வந்த செல்லக்காசுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here