அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபைக்கூட்டம்

0
254

IMG_4096றிசாத் ஏ காதர்
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபைக்கூட்டம் நிருவாக ஆலோசகர் ரீ.விக்ரமரசிங்கம் தலைமையில் கடந்த 2017.07.22ஆம் திகதி (சனிக்கிழமை) கல்முனை பல்தேவைக்கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிருவாகக் குளறுபடிகள் காரணமாக சங்கத்தில்  முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு செயலாளர் ஒப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். அக்கடிதத்துக்கமைவாகவே கடந்த சனிக்கிழமை இக்கூட்டம் இடம்பெற்றதாக நிருவாக ஆலோசகர் ரீ.விக்ரமசிங்கம் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்துக்கு முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எம்.ஏ.வஹாப் உட்பட, முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
01.தொழிற்சங்கத்தினால் 2017.05.01ஆந் திகதிய பொதுச்சபையின் தீர்மானத்தின் பிரகாரம், தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபை தொழிற்சங்க யாப்பு விதிமுறைகளுக்கமைய கூட்டப்படாமையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கத் தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாகப் பிரகடனம் செய்யப்படுகின்றது.

02.தொழிற்சங்க யாப்பின் பந்தி 04, 24க்கமைவாக விசேட பொதுச்சபைக்கூட்டத்தை தொழிற்சங்கத் தலைமைக்காரியாலம் அமைந்துள்ள இடத்தில் சங்க ஆலோசகர்களின் தலைமையில் கூட்டப்படுதல் வேண்டும். இக்கூட்டத்துக்கு சகல தொழிற்சங்க ஆலோசகர்கள், மாவட்டக்கிளை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் கலந்து கொள்ளல் வேண்டுமென பிரகடனம் செய்யப்படுகின்றது.

03.  குறித்த எமது தீர்மானத்துக்கு முரணாக தொழிற்சங்கத்தலைவர் செயற்பட்டால், தாபன விதிக்கோவை அத்தியாயம் ஓஓஏ க்கு அமைவாகவும், தொழிற்சங்க பொதுவான சட்டதிட்டங்களுக்கமைவாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்துக்கு சட்ட நடவடிக்கைக்காக முன்வைக்கப்படும்.

04. பொதுச்சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, புதிய நிருவாகம் தெரிவு செய்யப்படுமானால், அந்த நிருவாகத்தை ஏற்றுக்கொள்வதுடன், தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இச்சபை ஒரு போதும் உடன்படாதென்பதனையும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றோம் என்றும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. IMG_4096 IMG_4097 (1) IMG_4099

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here