கல்வித்துறையை மேம்படுத்த மலேசியாவின் மலாயா வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
183

IMG_1160(ஆர்.ஹஸன்)
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடாத்துகின்ற சர்வதேச மலாயா-வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும் மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் கல்வித்துறை பங்களிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில், சர்வதேச மலாயா–வேல்ஸ் பல்கலைக்கழத்துடன் மட்டக்களப்பு கெம்பஸை இணைத்து முகாமைத்துவ, தொழில்நுட்பப் பாடங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும், உயர்கல்வி–பட்டப்படிப்பு வழங்குவது சம்பந்தமாகவும் இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இரு பல்கலைக்கழக நிர்வாகத்துக்குமிடையில் மலேசிய உயர் கல்வியமைச்சில் மேற்கொள்ளப்படவுள்ளமை விசேட அம்சமாகும். இதன் மூலம், மட்டக்களப்பு கெம்பஸுக்கு சர்வதேச ரீதியில் மேலும் அங்கீகாரம் கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் சார்பில் பொறியியலாளர் நிப்றாஸ் மொஹமட் மற்றும் சர்வதேச மலாயா-வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அத்தோனி மைக்கல் ஆகியோரும் கலந்து கொண்டனர். IMG_1158 IMG_1159 IMG_1160

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here