மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முன்னிருப்புக்காக பல்வேறு பணிகளை ஆற்றியவர்- யு.எல்.எம்.என்.முபீன்

0
265

(ஆதிப் அஹமட்)
முன்னாள் அமைச்சரும் தலை சிறந்த அரசியல்வாதியுமான ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் மரணம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மூத்த தலைமையான அன்னார் சொல்லிலும் செயலிலும் தூய்மையானவராக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு, அரசியலில் முழுமையாக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு யுகப்புருஷராவார்.

முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்லாது, தமிழ் பேசும் மக்களுக்காகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய வல்லமையை இனங்கண்டு அவர் யுத்தம் நிலவிய பல்வேறு பிரதேசங்களில் அபிவிருத்திக்குப் பொறுப்பானவராக அப்போதைய அரசாங்கம் நியமித்தது. மேலும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முன்னிருப்புக்காக பல்வேறு பணிகளை அவர் ஆற்றியமையை இன்றும் மக்கள் நினைவு கூறுகின்றனர்.

அவரை பிரிந்து அல்லலுறும் அவரின் குடும்பத்துக்கு அல்லாஹ் பொறுமையை வழங்குவதோடு, அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் தன்னுடைய அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.white-background_20170726085031601

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here