எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க "பாராளுமன்றத்தில் நாற்பதாண்டு" நிறைவு நிகழ்வு

0
259

DSC_9901 (Copy)(அஷ்ரப் ஏ சமத்)
1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி இந்நாட்டில் ஏற்படுத்திய பாரிய பொருளாதார, சமூக மற்றும் கலாசார மாற்றத்தின் 40ம் ஆண்டு நிறைவையும், பிரதமர் ரணில் விக்கிமசிங்க பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட 40 வருடப்பூர்த்தியையும் முன்னிட்டு பல்வேறு மத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் தொடரில் பிரதமருக்கும், நாட்டிற்கும் நலன் வேண்டி விஷேட நிகழ்வு கடந்த 2017 ஜூலை 25ம் திகதி கொலொன்னாவ ஜூம்ஆ மஸ்ஜித் மண்டபத்தில் கொலொன்னாவை ஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், கொலொன்னாவை ஜூம்ஆ மஸ்ஜிதின் பிரதான இமாம்கள் மௌலவி சிராஜ்டீன், மெளலவி இஸ்ஸடீன் ஆகியோரும் பள்ளிவாசல் நிர்வாக சபையினர் மற்றும் கொலொன்னாவ மஸ்ஜித் சம்மேளனத்தலைவர் ஹனீப் ஹாஜி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். DSC_9901 (Copy)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here