"புதிய முறையில் கற்பித்தல்" போட்டியில் கதுருவெல அஷ்ஷெய்க் ஜவாஹிர் ஷர்கி முதலிடம்

0
254

ஆரிப் எஸ்.நளீம்

பொலன்னறுவை-கதுருவெல மஜீதியா அறபுக்கல்லூரி ஆசிரியர்களுக்கிடையே “புதிய முறையில் கற்பித்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, அதில் இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் கதுருவெல முஸ்லிம் கொலனி பச்சை பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஜவாஹிர் ஷர்கி அவர்கள் முதலிடம் பெற்றுக் கொண்டார். வெற்றி பெற்ற அவருக்கான  கேடயம், சான்றிதழ், பணப்பரிசு என்பன விரைவில் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இக்கருத்தரங்கிலும் போட்டியிலும் கலந்து கொண்ட  ஏனையோருக்கான கேடயம், சான்றிதழ், பணப்பரிசு என்பன குறித்த நிகழ்வில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நஜ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் அஷ்ரப்  அவர்கள்  ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் கிதாபுகள்  பழையதாக இருந்தாலும், இக்காலத்திற்கேற்ற வகையில் நவீன சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி புகட்டும் முறை மற்றும் பரீட்சை நடாத்தும் முறை, வினாக்களைத்தெரிவு செய்யும் முறை மற்றும் கற்றல் கற்பித்தல் சம்பந்தப்பட்ட  ஆய்வுகள் விரிவாக  விவரிக்கப்பட்டது. WhatsApp Image 2017-07-27 at 4.08.19 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here