வாழைச்சேனை கடதாசி ஆலை விரைவில் புனரமைக்கப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
221

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர், வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரிய நாட்டின் ஆயிரத்தி அறுநூறு மில்லியன் ரூபா நிதியளிப்பில் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படும் என்று பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார். 01 02

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here