கல்குடாவில் பொலிஸ் நடமாடும் சேவை: பிரதம அதிதியாக பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்தினம்

0
191

S1630075கல்குடா செய்தியாளர்

பொலிஸ் மாஅதிபரின் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் “கிராமிய மக்களுக்கு காலடியில் பொலிஸ் சேவை” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளில் ஒரு மாதத்திற்கான நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.கே.கீரகல தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சமூகப்பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்தினம் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன, பிரதேச கிராம சேவை அலுவலர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள, பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சமூகப்பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரட்ணத்தின் மேற்பார்வையில் ஒரு மாத காலத்திற்கான பொலிஸ் சேவையின் நடமாடும் சேவை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பிரிவுகளிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S1630064 S1630065 S1630068 S1630069 S1630070 S1630072 S1630075 S1630081 S1630083 S1630084 S1630085

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here