அவதூறுகளுக்கு அஞ்சி அரசியலிலிருந்து பின்வாங்கப்போவதில்லை: ஜான்சிராணி சலீம்

0
230

unnamedதேசிய காங்கிரஸின் வடக்கு நோக்கிய எழுச்சியையும், அதில் இவரின் பங்களிப்பையும் ஜீரணிக்க முடியாத அரசியல் கோழைகளால் பரப்பப்படுகின்ற முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அண்மைய தினங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசமப்பிரசாரங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நான் அரசியலில் கற்றுக்குட்டியல்ல. எனது 10 வருட கால அரசியல் வாழ்க்கை ஒன்றும் ரோஜா பூ மெத்தையுமல்ல. வன்னி எனக்கு புதிய களமுமல்ல. எனது மீளெழுச்சியால் அதிர்ச்சிப்பயம் பிடித்துள்ள சில அரசியல்வாதிகளும், அவர்களின் அடியாட்களும் என்னை விரட்டப் பார்க்கின்றனர். அதற்காக இல்லாத, பொல்லாத கதைகளைத் திட்டமிடப்பட்ட வகையில் புனைந்து எனது நற்பெயருக்கும் எனது செல்வாக்குக்கும்  களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

முதலில் என்னுடன் பேரம் பேசினார்கள். பின்னர் எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுத்தார்கள். இப்போது அவதூறுகள் பரப்புகின்றார்கள். ஒரு பெண்ணுக்கெதிராக என்னவெல்லாம் அவதூறுகளைப் பரப்ப முடியுமோ அதையெல்லாம் இந்த வீணர்கள் செய்வார்கள். அதற்காக நான் அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதேயில்லை.

நான் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து வெறும் 40 நாட்கள் மாத்திரமே கழிந்துள்ளன. இதற்குள்ளாகவே வன்னியின் சில அரசியல்வாதிகளுக்கு காய்ச்சல் பிடித்தது போலாகி விட்டது. இது எனக்கு கிடைத்த முதலாவது மகத்தான வெற்றியாகும். நான் இவை போன்ற தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக்கி வட மாகாண அரசியலில் முதலாவது முஸ்லிம் சாதனைப்பெண் என்கிற மகுடத்தை அடைந்தே தீருவேன். எனக்கு இந்த வாய்ப்பை தந்திருப்பதற்காக தலைவர் அதாவுல்லாவுக்கு இத்தருணத்தில் எனது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது அபாண்டங்களைச் சுமத்துகின்ற அற்பர்களே வெட்கப்பட்டு ஓடி ஒழிய வேண்டும். நானல்ல. பெண்கள் அவர்களின் இல்லங்களிலுமுள்ளனர். அவர்களுக்கான கூலியை இறைவன் நிச்சயம் வழங்குவான். எனது உண்மைத்தன்மையை உள்ளபடி புரிந்து நேரிலும், தொலைத்தொடர்பு மூலமாக உரையாடியும் ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது என்பதையும் அவர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here