சிறந்த ஊடகவியலாளருக்கான விருது விழாவில் விடிவெள்ளி ஆசிரியர் பைறூஸுக்கு விருது

0
147

20375867_579951362394895_1432156607991869296_nநன்றி-காத்தான்குடி இன்போ

சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி விருதினை வென்றுள்ளது.

கல்கிஸை, மவுன்ட்லவினியா ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் ‘சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செய்தி இணையத்தளங்களுக்கான’ சிறப்புச்சான்றிதழ் விருதை ‘விடிவெள்ளி’ சார்பில் அதன் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ்  பெற்றுக் கொண்டார்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து 18 வருடங்களாக சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவை நடத்தி வருகின்றன.

இதுவரை காலமும் பத்திரிகைகளுக்கு மாத்திரமே விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை பத்திரிகைகளால் நடத்தப்படும் இணையதளங்களும் விருதுகளுக்காக உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செய்தி இணையத்தளங்களுக்கான சான்றிதழ் விருதை தமிழ் மொழிப்பிரிவில் விடிவெள்ளி வென்றுள்ளது.

மேற்படி விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான காத்தான்குடியைச்சேர்ந்த எம்.பி.எம்.பைறூஸ் இளம் வயதில் ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமையுள்ளவராகக் காணப்படுகின்றார்.

விடிவெள்ளி பத்திரிகையினை சிறப்பாக வழி நடாத்தி வரும் இவர், அதன் இணையதளத்தினையும் சிறப்பாக வழி நடாத்தி வருகின்றார். மேற்படி ஊடகவியலாளர் பைறூஸ் காத்தான்குடியைச்சேர்ந்த கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹியின் புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 20375867_579951362394895_1432156607991869296_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here