காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி நியாஸ்தீன் ஹாஜி ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி (வீடியோ)

0
343

கவர் போட்டோஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்

ஓட்டமாவடி காவத்தமுனையில் இயங்கி வருகின்ற விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி அக்கீல் டயர் வியாபார தள உரிமையாளர் தேசமான்ய அல்ஹாஜ் நியாசிதீன் ஹாஜி அவர்களால் ஒரு இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக நேற்று 27.07.2017ம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பாடசாலையின் அதிபர் நெய்னா முகம்மது மற்றும் புதிய பணிப்பாளர் சட்டத்தரணியும் பதில் நீதவானுமான ஹபீப் மொஹமட் றிபான், எழுத்தாளர் அறபாத் மெளலவி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த விசேட தேவையுடையோர் பாடசாலையானது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனைப் பிரதேசத்தில் சுமார் பத்து வருடமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின் நிர்வாகச் செயற்பாட்டின் கீழியங்கி வந்தது.

பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகம் பிறப்பால் (அங்கவீனம்) அல்லது மூலையின் நுண்ணறிவுத்திறன் குறைபாடுள்ளவர்களாகவும், பார்வைக்குறைபாடு, மற்றும் உள ரீதியாக சிந்திப்பதில் சிரமம், புரிந்து கொள்வதில் சிரமம், கேட்டல் குறைபாடு, பேச்சுக்குறைபாடு, அவயங்கள் குறைபாடு மனவளர்ச்சி குன்றியவர்களாகவும், நடத்தைகளில் மாற்றம், மெல்லக்கற்றல், நீண்ட கால மருத்துவக் கண்காணிப்புகளுடன் கூடிய தேவைகள் போன்ற குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர்.

அத்தோடு, ADHD அதிக செயற்பாடுகளைக் கொண்டவர்கள், CEREBRAL PALSY மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,  AUTISM ஓட்டீசம், MENTALLY DEVELOPMENT DELAY மூளை விருத்திக்குறைவு, DOWN SYNDROME மன்கொள்ளிய பாதிப்பு, EPILEPSY வலிப்பு நோயைக் கொண்டவர்கள், DEAF காது கேளாமை போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

ஆகவே, இவ்வாறான பாரிய பிரச்சனைகளுடன் காணப்படும் விச்ஷேட தேவையுடையவர்களைக் கொண்ட குறித்த பாடசாலையினை கடந்த 11.02.2017ம் திகதி கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது. அதன போது, புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.

தலைவராக சட்டத்தரணியும் பதில் நீதவானுமான ஹபீப் மொஹமட் றிபான் தெரிவு செய்யப்பட்டதோடு, உப தலைவராக தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனியும் செயலாளராக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி, பொருளாளராக எம்.பீ.எம். ஜஃபரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு, குறித்த பாடசாலைக்கு உடனடித் தேவையாக இருக்கின்ற மணவர்களுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள், பஸ்ஸுக்கான எரிபொருள் கொடுப்பனவு, மாணவர்களுக்கான நாளாந்த போஷாக்குணவு, பாடசாலைக் காவலாளிகளுக்கான கொடுப்பனவும், பராமரிப்பு போன்றவைகளுக்காக புதிய நிருவாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

வலது குறைந்தோர் அல்லது விஷேட தேவையுடையோர் சமூகத்தால் அரவணைக்கப்பட்டு அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மக்கள் தெளிவுடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டுமென தேசமான்ய நியாஸ்தீன் ஹாஜி பாடசாலை நிருவாகத்துடனான கலந்துரையாடலின் பொழுது தெரிவித்தார்.

அந்த அடிப்படையிலே தான் குறித்த பாடசாலைக்கு தனது இலண்டனிலிருக்கும் சகோதரியின் கணவர் வழங்கிய 50000 ரூபாய்களோடு தனது 50000 ரூபாய்களுடன் ஒரு இலட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளேன். இதனை ஊடகங்கள் மூலமாக சமூக மயப்படுத்த வேண்டு,மென்ற தேவையில் நாங்கள் இதனை ஊடகமயப்படுத்தவில்லை.

முக்கியமாக இவ்வாறான நன்கொடைகள் எதற்காக வழங்கப்படுகின்றதென்பதனையும், விஷேட தேவையுடையோர் சமூகத்தால் அரவணைக்கப்பட்டு அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மக்கள் உணர்ந்து, அவகளின் நலத்திற்காக நன்கொடைகளை வாரி வழங்க முன்வர வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றதென மேலும் கலந்துறையாடலில் தெரிவித்தார்.

20369045_1446053022151694_4092679270113605336_o 20448882_1446052828818380_2249676056324471882_o 20507000_1446054075484922_4466245233579853945_o கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here