அட்டாளைச்சேனையில் 17ஆம் திகதி அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் நஸீர்

0
183

(சப்னி அஹமட்)

05அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பித்தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கூட்டம் நேற்று அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவரும், அமைச்சருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது இதன் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடந்து உரையாற்றுகையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் மூலமே நமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றது அதில் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சுகாதார அமைச்சராக இருந்து கிழக்கில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சமமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். அதில் ஓர் திட்டமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையை அபிவிருத்தி செய்கின்ற பொறுப்பு என்னிடம் உள்ளது.

அந்தவகையில்; எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் புதிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான அபிவிருத்தி போன்ற திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகே, பிரதி அமைச்சர்கள், கிழக்கு முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இவ்வாறான சேவையைகளை ஆரம்பிக்கவுள்ளதாவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் முயற்சியில் பெறப்பட்ட நிதியில் அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் தற்போது மேற்கொண்டு வரும் கட்டிடட தொகுதியுடன் மற்றுமொரு புதிய கட்டிட தொகுத்திக்கான அடிக்கல் நடலும், அதற்கான முன் வழி பாதைக்காக கொள்வனவு செய்யப்பட்ட காணியில் வளாக கட்டமைப்பு ஆரம்பிப்பதும், அட்டாளைச்சேனை ஆயுர் வேத வைத்தியசாலையில் மற்றுமொரு கட்டிடத்தை திறந்து வைப்பதும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான புதிய கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடலும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அட்டாளைச்சேனை பாடசாலை கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஸின் தலைவரின் நிதியில் அட்டாளைச்சேனை மைதானத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்,
காபெட் வீதிகள் ஆரம்பிப்பது, மீனவர் மற்றும் விவசாய அபிவிருத்தி தொடர்பாகவும், சிறுவர் பூங்கா அபிவிருத்திகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இங்கு ஆராய்யப்பட்டது.(F)01 06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here