மட்டக்களப்பு வாவிக்கரையின் அவலநிலை

0
206

மீராவோடை யாஸீன்

மீன்பாடும் தேனாடாம் மட்டு நகருக்கு அழகு சேர்ப்பது இந்த வாவிக்கரை தான். ஆனால், அண்மைக்காலமாக இம்மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவாகக் காணப்படுவதன் காரமாக வாவிக்கரையில் பாசிகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அன்றாடம் இப்பாதையால் பல்லாயிரக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியவர்களாக தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமாத்திரமென்று இவ்வாவிக்கரையோரத்தில் அதிகமான குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதையும் கழிவுகள் நிறைந்து காணப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாநகர சபை கூடுதல் கவனஞ்செலுத்தி குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கையெடுப்பதுடன், இவ்வாவிக்கரையைத் துப்புரவு செய்து, அழகுபடுத்தி இதில் காணப்படும் குப்பைகள் மற்றும் படிந்து காணப்படும் பாசிகளையும் அகற்றித்தருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். WhatsApp Image 2017-07-30 at 4.06.35 PM WhatsApp Image 2017-07-30 at 4.06.36 PM WhatsApp Image 2017-07-30 at 4.06.37 PM WhatsApp Image 2017-07-30 at 4.06.38 PM WhatsApp Image 2017-07-30 at 4.06.42 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here