இணை வைப்பாளர்களை ஆதரிக்கும் முஸ்லிம்கள்!!!

0
266

(எச்.எம்.எம்.பர்ஸான்)

downloadசத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை இவ்வுலகில் நிலை நாட்ட இலட்சக்கணக்கான நபிமார்களை அல்லாஹ் இப்பூமிக்கு அனுப்பி வைத்தான். அதில் இறுதி நபி முகம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரப்பணியை பல இன்னலுக்கு மத்தியில் முன்னெடுத்தார்கள். அப்போது இந்த சத்தியக்கொள்கையினை நிலை நாட்ட விடாமல் இணை வைப்பாளர்கள் மிகவும் தடையாகவிருந்தார்கள். அப்படிப்பட்ட இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள் என இறைத்தூதர் அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.

குறிப்பாக தாடி விடயத்தில், தாடியை வளருங்கள் மீசையைக் கத்தரியுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறினார்கள்.

புனித இஸ்லாம் இப்பூமியில் வளர்வதற்கு இரத்தங்கள் சிந்தி, உடமைகள் இழந்து, உயிர்களைக் கொடுத்து நாம் இன்று நிம்மதியாக வாழ்வதற்கு நம் முன் சென்றோர் வழியமைத்துத் தந்துள்ளார்கள். நாம் அவர்களைப் போன்று தியாகங்கள் செய்யா விட்டாலும், அல்லாஹ்வுடைய தூதர் சொன்ன பிரகாரம் தாடியை வளர்த்து மீசையைக் கத்தரித்து இணை வைப்பாளர்களுக்கு ஒப்பாக நடக்காமல் நபிகளார் சொன்ன பிரகாரம் நடந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக இன்றைய இளைஞர் மத்தியில் சகல விடயங்களிலும் அந்நியரின் காலாசாரங்களும் பின்பற்றுதல்களும் அணுகும் பிசகாமல் பின்பற்றப்பட்டு வருவதை நாம் கண்கூடே கண் வருகின்றோம்.

சினிமா கூத்தாடிகளைப் பின்பற்றி தடியை வளர்ப்பதும் அதனை வெவ்வேறு கோணங்களில் வளர்ப்பதும் என நம் சமூகத்திலுள்ள இளைஞர்களை தாடி விடயத்தில் பாரிய நோய் பீடித்துள்ளதை நாம் கண்டு கொள்ளலாம்.

இது விடயத்தில் அந்நிய கலாசார சீரழிவுக்குள் ஆர்ப்பட்டு போகாமல் இறை, இறைத்தூதர் கட்டளைகளைப் பின்பற்றி வாழக்கூடிய சமூகமாக நாம் மாற வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செயுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி)
ஆதாரம்: புகாரி 5892

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here