ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் நிதியுதவி

0
267

1cbd569f-ae92-4dd0-8927-bb08f935e289(ஆர்.ஹஸன்)
ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆப் பள்ளிவாசல் புனர்நிர்மாணப்பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனூடாக ஒரு மில்லியன் ரூபா நிதி அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி.  மற்றும் முன்னாள் உறுப்பினர் ரவூப் ஏ.மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, மிச்நகர் பரகா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப்பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனூடாக வழங்கி வைத்தமைக் குறிப்பிடத்தக்கது. 1cbd569f-ae92-4dd0-8927-bb08f935e289 02991a2c-7dca-416c-91cf-60887b88942f d7acc57e-083a-4832-82e7-b7a2a910c705 e9974548-9993-4eeb-aa78-ee75f21782dd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here